சிவாஜி பட உரிமையை வாங்கியது கலைஞர் டிவி

Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த்தின் பிரமாண்டப் படமான சிவாஜியின் டிவி உரிமையை, புதிதாக தொடங்கப்படவுள்ள கலைஞர் டிவிவாங்கியுள்ளது. இதன் மூலம் சன் டிவி முற்றிலும் ஓரம் கட்டப்பட்டு விட்டது.

ஏவிஎம் தயாரிப்பில் உருவான சிவாஜி படம் வெளியாக இன்னும் 21 நாட்களை உள்ள நிலையில் ரஜினி ரசிகர்களிடையே சிவாஜி படம் குறித்து எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் சன் டிவியுடனான உறவை திமுக முறித்துக் கொண்டு விட்ட நிலையில், புதிதாக கலைஞர் டிவியைத் தொடங்குகிறது திமுக. திமுகவும், ராஜ் டிவியும் இணைந்து இந்த டிவியை தொடங்கவுள்ளனர்.

இதற்கான அறிவிப்பு முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி முதல் கலைஞர் டிவி தொடங்கப்படுகிறது.

கலைஞர் டிவிக்கு நிகழ்ச்சி தாயரிப்புக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கலைஞர் டிவிக்கு நிகழ்ச்சி தயாரித்து தர ராடன் டிவி அதிபர் நடிகை ராதிகாவும் படு தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதற்காக சமீபத்தில் கருணாநிதியை நேரில் சந்தித்தும் பேசினார் ராதிகா.

இந்நிலையில் புதுப்படங்களின் உரிமைகளை வாங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் படி ஏவிஎம்மின் பிரம்மாண்ட தயாரிப்பான சிவாஜி படத்தின் உரிமையை கலைஞர் டிவி வாங்கியுள்ளது.

படத்தை வாங்குவற்காக பல கோடி பணத்தை ஒரே செக்கில் கொடுத்து கலைஞர் டிவி வாங்கியுள்ளதாம். கலைஞர் டிவி படத்தை வாங்க களம் இறங்கியதை அறிந்த சன் டிவி, போட்டியிலிருந்து விலகிக் கொண்டு விட்டதாம்.

ஏவிஎம் சகோதர்களுடன் முதல்வர் கருணாநிதிக்கு மிக நெருக்கமான நட்பு உண்டு. இதன் அடிப்படையிலும் ரஜினியும் ஓ.கே. சொன்னதாலும் இந்த உரிமை கலைஞர் டிவிக்கு கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.

இதன் மூலம் முதல் முறையாக சன் டிவிக்கு பெரிய ஆப்பு அடிக்கப்பட்டுள்ளது.

தமிழில் தனியார் தொலைக்காட்சிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், சன் டிவியைத் தாண்டி ஒரு டிவிக்கு, ரஜினி நடித்த மிகப் பெரிய படம் ஒன்று விற்பனையாகியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி ஜூன் 15ம் தேதி தியேட்டர்களுக்கு வருகிறது. தமிழகத்தில் 350 தியேட்டர்களில் படம் ரிலீஸாகவுள்ளது. இது தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மிகப் பெரிய சாதனை.

350 தியேட்டர்களிலும் டிஜிட்டல் ஆடியோ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவாம். மேலும் படத்தை தரத்துடன் பார்க்கவும், வசனங்களை கேட்கவும் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

ஆந்திராவில் 150 தியேட்டர்களிள் தெலுங்கு சிவாஜி ரிலீஸ் ஆகிறது. கேரளாவில் தமிழிலேயே சிவாஜி திரையிடப்படுகிறது. அங்கு 75 தியேட்டர்களில் படம் திரையிடப்படுகிறதாம்.

கர்நாடகத்தில் 100 தியேட்டர்களில் படத்தைத் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. சிக்கலின்றி திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்போதைக்கு 45 தியேட்டர்களில் படத்தைத் திரையிட அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துள்ளன.

பெங்களூர் நகரில் மட்டும் 17 தியேட்டர்களில் சிவாஜியைத் திரையிட ஏவி.எம். நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+