மணிரத்தினம் தம்பி மலையில் இருந்து விழுந்து பலி
சென்னை:இயக்குநர் மணிரத்தினத்தின் தம்பி ஜி.சீனிவாசன் மலையேற்றப் பயிற்சியின்போது தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இயக்குநர் மணிரத்தினத்தின் தம்பி சீனிவாசன். ஆடிட்டரான இவர், மணிரத்தினத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில், அலைபாயுதே, திருடா திருடா, இருவர், நேருக்கு நேர், கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, குரு உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.
கோடை விடுமுறையையொட்டி தனது மனைவி சந்தியா மகள்கள் ஷ்ரேயா, அக்ஷயா, திவ்யா (கடைசி இருவரும் இரட்டையர்கள்) ஆகியோருடன் குலுமனாலிக்குச் சென்றிருந்தார் சீனிவாசன்.
அங்கு மலையேற்றப் பயிற்சியில் (டிரக்கிங்) ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென தவறி 50 அடி பள்ளத்தில் விழுந்தார். மனைவி, மகள்கள் கண் எதிரேயே பரிதாபமாக உயிரிழந்தார் சீனிவாசன்.
3 மணி நேர முயற்சிக்குப் பின்னர் சீனிவாசனின் இறந்த உடல் மீட்கப்பட்டது. பின்னர் குலுமனாலியிலிருந்து சீனிவாசனின் உடல் டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து இன்று சென்னைக்கு உடல் கொண்டு வரப்படுகிறது.
சீனிவாசன் மரணம் குறித்து கேன்ஸ் பட விழாவுக்குச் சென்றிருந்த மணிரத்தினத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது பிரான்ஸிலிருந்து ஸ்பெயின் சென்றுள்ளார். தம்பியின் மரணச் செய்தியை அறிந்த அவர் ஸ்பெயின் பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னைக்குத் திரும்புகிறார்.
மணி ரத்னத்தின் அண்ணனான தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன் (ஜிவி) சில ஆண்டுகளுக்கு முன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஜிவியும் சீனிவாசனும் அக்கா-தங்கைகளான சுஜாதா, சந்தியா ஆகியோரை மணந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications