கருணாநிதி குடும்பத்தில் இன்னும் அதிகாரபோட்டி வெடிக்கும்: மாஜி மந்திரி
கோவை:கருணாநிதி குடும்பத்திற்குள் இன்னும் அதிகமாக அதிகார போட்டி வெடிக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
கோவையில் மாநகராட்சி பூங்கா கட்டடத்தில் இயங்கி வந்த அதிமுக மகளிர் மன்றத்தை மாநகராட்சி கைப்பற்றியதை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் நிபந்தனை ஜாமீனில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன்,
கோவை செல்வபுரம் பகுதியில் திமுக, மதிமுக, தமுமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் 12க்கும் மேற்பட்ட மன்றங்கள் அரசு இடத்தை ஆக்கிரமித்துள்ளன. இந்த பகுதியின் அரசு இடங்களில் திமுகவினர் 8 வீடுகளை கட்டி வாடகை வசூலிக்கின்றனர்.
இந்த ஆக்கிரமிப்பு இடங்களில் 3 திமுக அலுவலகங்களும், தமுமுக அலுவலகமும், மதரசா பள்ளியும் கட்டப்பட்டுள்ளன.
இதில் ஒரு சென்ட்டுக்கும் குறைவான இடத்தில்தான் அதிமுக மன்றம் அமைந்துள்ளது. மற்ற மன்றங்கள் அப்படியே இருக்கும்போது, இந்த மன்றத்தை மட்டும் இடிப்பதாக தகவல் வந்தது. அதனால் சாலை மறியல் செய்தோம்.
இதற்காக 5 எம்எல்ஏக்கள் உள்பட 83 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருணாநிதி குடும்பத்திற்குள் அதிகார போட்டி இன்னும் பெரியதாக வெடிக்கும். தயாநிதி ஆதரவாளர் என்ற முத்திரை பொங்கலூர் பழனிச்சாமிக்கு இருக்கிறது. இதை மறைக்கவே எங்களை கைது செய்து சிறையில் அடைக்க போலீஸாரை தூண்டியுள்ளனர் என்றார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications