அதிமுக அலுவலகம் செய்த விதி மீறல்!!
சென்னை:அதிமுக தலைமைக் கழகத்தில் கூடுதலாக கட்டப்பட்ட ஒரு புதிய அறையை விதிமுறைக்குப் புறம்பாக கட்டியதால்தான் அந்த அலுவலகததிற்கு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலக வளாகத்தில் புதிதாக ஒரு அறை கட்டப்பட்டது.
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும விதிகளின்படி புதிதாக ஒரு கட்டடம் கட்டுவதாக இருந்தால் குறிப்பிட்ட இட வசதி விடப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஜெயலலிதா ஆச்சே, டூல்ஸ் எல்லாம் பார்ப்பாரா. விதிமுறையை எல்லாம் மீறி புதிய அறையை அதிமுக கட்டியது.
இதுதான் இப்போது பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளது.
சமீபத்தில் இந்த புதிய அறையை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழு அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. அதன் பின்னரே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே அதிமுக தலைமை கழகத்தை இடிக்க அரசு அனுப்பியுள்ள நோட்டீஸை எதிர்த்து அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளது.












Click it and Unblock the Notifications