ராஜ்யசபா: காங். வேட்பாளர் ஞானதேசிகன்
டெல்லிராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பி.எஸ்.ஞானதேசிகன் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்திலிருந்து காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கு வருகிற 15ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிமுக சார்பில் டாக்டர் மைத்ரேயன், இளவரசன் ஆகியோரும், திமுக சார்பில் கவிஞர் கனிமொழி, திருச்சி சிவாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜாவும் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார் என்பது தெரியாமல் இருந்து வந்தது. காங்கிரஸ் கட்சியில் உள்ள பல்வேறு கோஷ்டியினரும் சீட்டை வாங்க கடுமையாக முயன்று வந்தனர்.
இந்த நிலையில் ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவரும், தற்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ளவருமான பி.எஸ்.ஞானதேசிகனுக்கு சீட் கிடைத்துள்ளது. அவரது பெயரை காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மூப்பனார் காலத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் ஞானதேசிகன். கடந்த முறை வாசன் தலைவராக இருந்தபோது ஞானதேசிகனுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி கிடைத்தது. இந்த நிலையில் மீண்டும் சீட் பெற்று விட்டார் ஞானதேசிகன்.












Click it and Unblock the Notifications