திமுகவை பூண்டோடு ஒழிப்பேன்: ஜெ. சபதம்
சென்னை:எனது வாழ்நாளுக்குள் திமுகவை பூண்டோடு அழிப்பேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தை இடிப்பது தொடர்பாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இத் தகவலை திருமண நிகழ்ச்சியொன்றில் ெஜயலிலதா வெளியிட்டிருந்தார். பின்னர் அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில்,
அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு ஜூன் 2ம் தேதி ஒரு கடிதம் வந்தது.
அதில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த இடம், எம்.ஜி.ஆர். கட்சியைத் தொடங்கியபோது, 1972ம் ஆண்டிலிருந்து தமிழக மக்களின் அன்றாட வாழ்வில், கலந்துள்ள அதிமுகவின் தலைமைக் கழக அலுவலகத்தை இடித்து, தரைமட்டமாக்கச் சொல்லி ஒரு உத்தரவு அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, பின்னர் ஆளையே கடிப்பது போல எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் மீது தொடர்ந்து பழிவாங்கும் படலத்துக்குப் பிறகு, கருணாநிதியையும் அவரது கட்சியையும் ஆட்சியையும் முழு வீச்சில் எதிர்த்துக் கொண்டிருக்கிற அதிமுக தலைமை அலுவலகத்தை இடிக்க வேண்டும் என்ற அளவுக்கு அவரின் சிந்தனை உள்ளது.
அதிமுக மாபெரும் இயக்கம் என்பதும், அதனுடைய தொண்டர்கள் மாபெரும் உறுதி படைத்தவர்கள் என்பதும் கருணாநிதிக்குத் தெரியாது. இன்று இதைச் செய்கிறோமே நாளை அண்ணா அறிவாலயத்துக்கு என்ன கதி ஏற்படும் என்பதை யோசித்ததாகத் தெரியவில்லை.
எனது அரசியல் ஆசான் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில், அவர் எனக்கு இட்ட அன்புக் கட்டளையின் பெயரில், கட்சியைக் கட்டிக் காப்பேன் என்று அவர் தாயின் படத்தின் மீது நான் செய்து கொடுத்த சத்தியத்தின் பேரில் (அட, அப்படியெல்லாம் கூட நடந்ததா), அதிமுக கட்சியின் கொடியைக் காக்கும் கடமை உள்ளது என்ற பொறுப்பில், நான் ஒரு சபதத்தை எடுத்துள்ளேன்.
திமுகவை என் வாழ் நாளுக்குள் பூண்டோடு அழிப்பேன். எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும், எவ்வளவு சோதனைகள் ஏற்பட்டாலும் அவை அத்தனையும் கடந்து அதிமுகவின் லட்சக்கணக்கான தொண்டர்களின் துணையோடு தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவோடு, திமுகவை பூண்டோடு ஒழிப்பேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications