பள்ளி மாணவர்களுக்கு தனிப் பேருந்து
Subscribe to Oneindia Tamil
திருச்சி:நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பள்ளி மாணவர்களுக்கு தனி பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்துள்ளார்.
இன்று திருச்சியில் மாணவர்களுக்கு இலவச பேருந்து பாஸ் வழங்கும் விழாவில் பேசிய அவர்,
பள்ளி செல்லும் நேரங்களில் மாணவர்கள் அதிகமான கூட்ட நெரிசலை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் பல மாணவர்கள் பேருந்தை தவறவிட்டு பள்ளிக்கு தாமதாக செல்லும் நிலை உள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு செல்வதும், பொது மக்கள் பணிக்கு செல்லும் நேரமும் ஒன்றாக இருப்பதால் கூட்ட நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.
இதனால் மாணவர்களுக்கென தனி பேருந்துகள் விரைவில் இயக்கப்படும். அந்த பேருந்துகளில் மாணவர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications