மப்பில் ஆடிய மது விலக்கு ஏட்டுபஸ்ஸில் சில்மிஷம்-பயணிகள் தர்ம அடி
சென்னை:மது போதையில் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் சேஷ்டை செய்த மது விலக்கு அமல் பிரிவு தலைமைக் காவலருக்கு பயணிகள் சரமாரியாக உதை கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சென்னை செளகார்பேட்டையில் வசித்து வருபவர் செல்வம். திருவள்ளூரில், மது விலக்கு அமல் பிரிவில் தலைமைக் காவலராக இருக்கிறார். இவருக்கு 47 வயதாகிறது.
நேற்று குடித்து விட்டு பேருந்தில் பயணித்தார் செல்வம். அப்போது தனக்கு முன்பாக நின்று கொண்டிருந்த பெண்ணின் மீது சாய்வதும், உரசுவதுமாக சில்மிஷம் செய்து வந்தார்.
அந்தப் பெண் ஒதுங்கி நின்று பார்த்தார். ஆனாலும் செல்வத்தின் சேஷ்டைகள் எல்லை மீறத் தொடங்கின. இதனால் கடுப்பான அந்தப் பெண், செல்வத்திற்கு பளார் பளார் என கன்னத்தில் கடுமையாக அடி கொடுத்தார்.
இதைப் பார்த்ததும் சக பயணிகளுக்கும் வீரம் வந்து ஆளுக்கு நாலு போட்டு செல்வத்தை புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். புழல் போலீஸார் செல்வத்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications