விதைத்தால், அறுக்கத்தான் வேண்டும்;ஜெ.வுக்கு ஆற்காடு வீராசாமி சூடு!
சென்னை:மற்றவர்களை வசை பாட உங்களுக்கு மட்டும்தான் உரிமையா. மற்றவர்கள் பதில் கொடுத்தால் வாங்கிக் கொண்டுதானே ஆக வேண்டும். வினை விதைத்தவன் அறுத்துத்தானே ஆக வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதில் கொடுத்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி தன்னை பெண் என்றும் பாராமல், கடுமையாக விமர்சித்து பேசியும், எழுதியும் வருவதாக குற்றம் சாட்டி ஜெயலலிதா அறிக்கை விட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து அறிக்கை விட்டுள்ளார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி.
அதில், கடந்த 5.6.2007 அன்று தாங்கள் விடுத்த அறிக்கையில், தாங்கள் எழுதியுள்ள அறிக்கையின் இறுதியில், யாகாவா ராயினும் நா காக்க என்று எழுதியிருப்பது ஒரு வழிப்பாதை அன்று என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள் என்று நம்புகிறேன். பந்தை சுவரில் எறிந்தால் அது திரும்பவும் உங்கள் பக்கம்தான் வந்து விழும்.
ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட முதல்வரை, 84 வயதான ஒரு மூத்தவரை, அகில உலகத்திலும் உள்ள தமிழர்களால் ஏற்றிப் போற்றப்படுபவரை, அவருடைய பிறந்த நாளன்று எத்தகைய வார்த்தைகளால் அர்ச்சனை செய்திருந்தீர்கள்.
துரியோதனன், ஹிட்லர், துச்சாதனன், சகுனி, கம்சன், முசோலினி, இடி அமீன் ஆகிய அத்தனை பேரும் சேர்ந்த மொத்த உருவம்தான் முதல்வர் என்றும் பொய், புரட்டு, வஞ்சகம், சூழ்ச்சி, பொறாமை, வன்மம், இழிவான எண்ணங்களின் பிறப்பிடம் அவர் என்றும் நீங்கள் அறிக்கையில் கலைஞரைத் தாக்கினால், திமுககாரன் அதைத் தாங்கிக் கொள்வானா.
வினை விதைத்தால் அதை அறுத்துத்தானே ஆக வேண்டும். மற்றவர்களை வசை பாட உங்களுக்கு மட்டும்தான் உரிமையா. அதற்கு மற்றவர்கள் பதில் கொடுத்தால் வாங்கிக் கொண்டுதானே ஆக வேண்டும்.
மண விழாவில், திமுகவை அழிப்பேன் என்று நீங்கள் சத்தியமிட்டு சபதம் எடுப்பதாக அறிக்கையும் கொடுப்பீர்கள். அதற்கு நாங்கள் பதிலளிக்கக் கூடாதா. கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரசொலி மாறன் இறந்து கிடந்தபோது கூட, அரசியல் நாகரீகமே இல்லாமல், தங்கள் வீட்டு வாசலில் பட்டாசு கொளுத்தினீர்களே, அதற்குப் பெயர் பண்பாடா.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது கலைஞரை எவ்வளவு தூரம் மதித்தார், தொலைபேசியில் பேசி கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார், கலைஞர், எம்.ஜி.ஆரை எப்படியெல்லாம் மதித்தார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்களுக்கு அது தெரியும்.
நீங்கள் எந்த அளவுக்கு கண்ணியமாக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்களோ, அதே அளவுக்குத்தான் எங்கள் பக்கமிருந்தும் வார்த்தைகள் வரும் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் ஆற்காடு வீராசாமி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications