கன்னட பிரசாத்தின் தோழி சோனாலட்சுமிக்கு வலைவீச்சு
சென்னை:விபச்சார புரோக்கர் கன்னட பிரசாத்தின் நெருங்கிய தோழியும், அவரது தொழிலில் நெருங்கிய கூட்டாளியுமான சோனாலட்சுமி போலீஸ் பிடியிலிருந்து தப்பி விட்டார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
![]() |
சென்னை திருவான்மியூரில் ஒரு ஆடம்பர பங்களாவில் விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து விபச்சாரத் தடுப்புப் போலீஸார் அந்தப் பங்களாவை முற்றுகையிட்டனர்.
அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட நான்கு மும்பைப் பெண்கள் உள்பட 10 பேரை வளைத்துப் பிடித்தனர். கைதானவர்களில் சந்திரமோகன் ரெட்டி என்பவரும் ஒருவர். இவர் ஒரு வக்கீல்.
![]() |
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ரெட்டி. இவர்தான் அழகிகளை ஏற்பாடு செய்து கொடுத்தவர்களில் முக்கியமானவர். இந்த விபச்சார விடுதியை பிரபல விபச்சாரப் புரோக்கர் சோனாலட்சுமிதான் நடத்தி வந்தார்.
சென்னையில் துணை நடிகையாக சில படங்களில் நடித்துள்ள சோனா லட்சுமி விபச்சாரத்தைத்தான் பெரும் தொழிலாக நடத்தி வந்தார். கடந்த 10 வருடங்ளுக்கு மேலாக விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
பெண் கன்னட பிரசாத் என்று கூறும் அளவுக்கு விபச்சாரத்தில் கொடி கட்டிப் பறந்தவர். பிரசாத்தின் நெருங்கிய தோழியும் கூட்டாளியும் ஆவார். ஆடம்பர பங்களாக்கள், அடுக்குமாடிக் குடியிருப்புககளில் விபச்சாரம் நடத்தி வந்தார்.
3 முறை கைதானவர். குண்டர் சட்டத்தின் கீழும் ஒருமுறை கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகளின் தயவால் வெளியில் வந்து சுதந்திரமாக தொழில் நடத்தி வந்தார்.
சந்திரமோகன் ரெட்டி, சோனாலட்சுமியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய வேட்டையில் சோனா லட்சுமி தப்பி விட்டார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications