கொடநாடு எஸ்டேட் ஜெ.வுக்கு சொந்தம்: கருணாநிதி
சென்னை:கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதாவுக்கே சொந்தம் என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள எஸ்டேட் தற்போது அரசியல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இது ஜெயலிலதாவுக்குச் சொந்தமான எஸ்டேட் என்று திமுக கூறி வருகிறது. இங்கு விதிகளை மீறி கட்டடம் கட்டப்பட்டிருப்பதாக அரசு குற்றம் சாட்டி வருகிறது.
ஆனால் இந்த எஸ்டேட்டுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஜெயலலிதா கூறி வருகிறார். இந்த நிலையில் கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதே என்பதற்கான ஆதாரங்களை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மிக நீளமான ஒரு கதையைக் கூறி பின்னர் ஜெயலலிதாவுக்கும், கொடநாடுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்கியுள்ளார் கருணாநிதி.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,
கொட நாடு எஸ்டேட்டின் 2006ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முடிய லாப நஷ்ட கணக்கு.
ஜெயலலிதாவும், சசிகலாவும் ரூ. 3 கோடியே 60 லட்சம் பணத்தை இந்த எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர். சசிகலாவின் மூல தன கணக்குப்படி தொடக்க இருப்பு மூலம் ரூ. 1 கோடியே 80 லட்சம். இறுதி இருப்பு ரூ. 1 கோடியே 80 லட்சம்.
ஜெயலலிதாவின் மூல தனக் கணக்குப்படி தொடக்க இருப்பு ரூ. 1 கோடியே 80 லட்சம். இறுதி இருப்பு ரூ. 1 கோடியே 80 லட்சம்.
சசிகலாவின் நடப்புக் கணக்குப்படி தொடக்க இருப்பு 50 லட்சத்து 89 ஆயிரத்து 226 ரூபாய். பங்கு லாபம் ரூ. 50 லட்சத்து 89 ஆயிரத்து 226.
ஜெயலலிதாவின் நடப்புக் கணக்குப்படி தொடக்க இருப்பு 41 லட்சத்து 38 ஆயிரத்து 456 ரூபாய். பங்கு லாபம் 41 லட்சத்து 38 ஆயிரத்து 456 ரூபாய்.
இந்த ஆதாரங்களுக்குப் பிறகு கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதா அறிக்கையிலே,
தெரிவித்ததைப் போல தனியாருக்கு சொந்தமானதா அல்லது அவருக்கு சொந்தமானதா என்ற உண்மை பட்டவர்த்தனாக தெரிகிறதா இல்லையா.
ஜெயலலிதாவும், சசிகலாவும், சேர்ந்து ரூ. 3 கோடியே 60 லட்சம் முதலீடு செய்துள்ளதற்கு சான்று இது. எத்தனை சான்றுகளோ.
இப்போது நமக்கு ஒண்ணும் தெரியாத பாப்பா, போட்டுக்கிட்டாளாம் தாழ்ப்பாள் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications