சிங்கத்துடன் பிரசாரம் செய்யலாம்: நரேஷ்குப்தா
சென்னை:மதுரை மேற்குத் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் நிஜமான சிங்கத்துடன் பிரசாரம் செய்ய எந்தத் தடையும் இல்லை என்று தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறியுள்ளார்.
மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் பார்வர்ட் பிளாக் (தினகரன் பிரிவு) கட்சித் தலைவர் தினகரன், நிஜமான சிங்கத்துடன் தேர்தல் பிரசாரம் செய்ய தன்னை அனுமதிக்க வேண்டும் என காவல்துறை, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளார்.
இதற்காக ஒரு சிங்கத்தை கேரளாவிலிருந்து வாடகைக்கு எடுத்து வந்து மதுரை பக்கம் ஒரு கிராமத்தில் வைத்து பராமரித்தும் வருகிறார்.
இந்த நிலையில் இதுகுறித்து நரேஷ்குப்தாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, சிங்கத்தை தேர்தல் பிரசாரத்திற்குக் கொண்டு செல்ல சட்டப்படியான தடை எதுவும் இல்லை. ஆனால் இது மக்களை அச்சுறுத்தும் வகையில் அமையக் கூடும்.
தேமுதிகவுக்கு தனியான, அங்கீகரிக்கப்பட்ட சின்னம் ஏதும் கிடையாது. எனவே அவர்களுக்கு சுயேச்சை சின்னம்தான் ஒதுக்கப்படும். தங்களுக்குத் தேவையான சின்னத்தைக் கேட்டால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றார் குப்தா.












Click it and Unblock the Notifications