தமிழர்களுக்கு உணவு, மருந்து தர அனுமதிதராமல் இழுத்தடிக்கும் மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை:இலங்கையில் பசி, பட்டினியால் வாடும் தமிழ் மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்களை அனுப்புவதில் மத்திய அரசு மெத்தனம் காட்டுவதைக் கண்டித்து சென்னையில் பழ. நெடுமாறன் தலைமையில், உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்திற்கும், இலங்கையின் பிற பகுதிகளுக்கும் இடையிலான ஏ9 நெடுஞ்சாலையை இலங்கை அரசு மூடியது. இதனால் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்கள் உணவு, மருந்துப் பொருட்கள் இல்லாமல் கடும் பட்டினி, பசியில் வாடும் நிலை ஏற்பட்டது.

இலங்கை அரசின் இந்த நிலைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள், எதிர்ப்புகள் எழுந்தன. இருப்பினும் இலங்கை அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

இலங்கை அரசின் இந்த முடிவைத் தொடர்ந்து பசி, பட்டினியால் வாடும் யாழ் தமிழர்களுக்கு உதவ தமிழக மக்களிடம் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களை சேகரித்து அனுப்ப பழ. நெடுமாறன் தலைமையிலான தமிழ் ஈழ ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு கமிட்டி முடிவு செய்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் உணவு, மருந்துப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கையில் தமிழ் ஈழ ஆரவாளர்கள் ஒருங்கிணைப்பு கமிட்டி இறங்கியது. ரூ. 1 கோடி மதிப்பிலான உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் இவற்றை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் யாழ் தமிழர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என நெடுமாறன் கோரிக்கை விடுத்தார். இதற்கு செஞ்சிலுவைச் சங்கமும் சம்மதித்தது. இதையடுத்து மத்திய அரசின் அனுமதியைக் கோரி செஞ்சிலுவைச் சங்கம் விண்ணப்பித்தது.

கடந்த ஜனவரி மாதம் இதுதொடர்பான விண்ணப்பம் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த விண்ணப்பத்திற்கு மத்திய அரசுத் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லையாம்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் பிரமதருக்கு பலமுறை கோரிக்கையும் விடுத்து கடிதம் கொடுத்தனர். ஆனால் இப்போது வரை மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை.

இதன் காரணமாக சேகரிக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் கெட ஆரம்பித்தன. உணவுப் பொருட்கள் பாதிப்படைய ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் மத்திய அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து சென்னையில் நேற்று பழ. நெடுமாறன் தலைமையில் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

இப்போராட்டத்திற்கு வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு அளித்தனர்.

போராட்டத்தைத் தொடங்கி வைத்து வைகோ பேசுகையில்,

ஈழத் தமிழர்களின் நிலையை மத்திய அரசு உதாசீனப்படுத்துகிறது. உணவு, மருந்துப் பொருட்களை ஈழத்திற்கு அனுப்புவது தொடர்பாக பிரதமரை நான் நேரிலேயே சந்தித்துப் பேசினேன். அப்போது அவர் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் இதுவரை நடவடிக்கை எதுவும் இல்லை.

தமிழக மக்கள் திரட்டிக் கொடுத்த உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஈழத் தமிழரக்ளுக்கு வழங்க மத்திய அரசு யோசிக்கிறது என்று தெரியவில்லை. மனித நேயத்தின் அடிப்படையில், மத்திய அரசு செயல்படவில்லை.

முன்பு ஈழத் தமிழர்களுக்கு 2 கப்பல்களில் எம்.ஜி.ஆர். உணவு, மருந்துப் பொருட்களை அனுப்பினார். இன்று அந்த மனிதநேயம் எங்கு போயிற்று.

நீங்கள் ஈழத் தமிழர்களுக்கு உதவுங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் கொடுக்கும் உதவியை ஏன் தடுக்கிறீர்கள். நாங்கள் இவ்வளவு கூறியும் நீங்கள் கேட்கவில்லை என்றால் எந்த மொழியில் பேச வேண்டும்.

ஏ9 நெடுஞ்சாலை அடைக்கப்பட்டபோது, இந்திய அரசு மக்களின் வரிப்பணத்தில் இலங்கைக்கு பொருட்களை வழங்கியது. இது ஏன் வழங்கப்பட்டது. இலங்கை ராணுவத்தின் வளர்ச்சிக்காகவா, அதை ஈழத் தமிழர்களுக்கு வழங்கியிருக்கலாமே என்றார்.

பழ.நெடுமாறன் பேசுகையில்,

5 லட்சம் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் தவிக்கிறார்கள். அவர்களுக்காக நாங்கள் திரட்டிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்ப அனுமதி கேட்டு ஐந்து மாதங்களாகியும் இதுவரை மத்திய அரசு அனுமதி தரவில்லை, பதிலும் தராமல் உள்ளது.

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் பிரமதருக்குக் கடிதம் எழுதினார். வைகோ நேரிலேயே போய் கோரிக்கை விடுத்தார். ஆனால் நடவடிக்கை எடுத்தது போல தெரியவில்லை என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+