தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு 6 பேர் போட்டியின்றி தேர்வு
சென்னை:தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
![]() |
இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வரும் 8ம் தேதியன்று தேர்தல் ஆணையம் வெளியிடும்.
திமுக சார்பில் கனிமொழி, திருச்சி சிவா, அதிமுக சார்பில் மைத்ரேயன், இளவரசன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ராஜா, காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஞானதேசிகன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று பிற்பகல் வரை மொத்தம் உள்ள 6 இடங்களுக்கு 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களில் சுயேட்சை வேட்பாளர் பத்மராஜனின் மனுவை எவரும் முன் மொழியாததால், பரிசீலனையின் போது அவரது மனு நிராகரிக்கப்படும்.
எனவே மற்ற 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது.
வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளான வரும் 8-ம் தேதி இவர்கள் 6 பேரும் தேர்தெடுக்கப்பட்டதற்கான முறையான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும்.













Click it and Unblock the Notifications