வெட்டிருவேன்..மீண்டும் சர்ச்சையில் தந்திரி புகழ் ஷோபா
திருவனந்தபுரம்:சபரிமலை முன்னாள் தந்திரி கண்டரரு மோகனருவை அழகிகளுடன் இருப்பது போல புகைப்படம் எடுத்த மிரட்டிய வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையாகியிருக்கும் விபச்சார அழகி ஷோபா, இன்ஸ்பெக்டரை கண்டம் துண்டமாக வெட்டி விடுவதாக மிரட்டல் விடுத்ததாக புது சர்ச்சை எழுந்துள்ளது.
சபரிமலை ஐய்யப்பன் கோவில் தந்திரியாக இருந்தவர் மோகனரு. கடந்த ஆண்டு கொச்சி, எர்ணாகுளத்தில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு இவர் போனபோது அவரை ஒரு கும்பல் மிரட்டி பெண்களுடன் இருப்பது போல புகைப்படம் எடுத்தது.இந்த பரபரப்புச் சம்பவம் தொடர்பாக விபச்சார அழகி ஷோபா, நடிகர் பெச்சு ரகுமான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.
சமீபத்தில் இந்த வழக்கில் தொடர்புடையவரான ஷோபாவின் கூட்டாளி அனில்குமார் என்பவரை 2 நாட்களுக்கு முன்பு பேரூர்கடை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் அழகி ஷோபா, பேரூர் கடை இன்ஸ்பெக்டரை போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அனில் குமாரை விட வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் 90 நாட்களில் உங்களை கண்டம் துண்டமாக வெட்டி விடுவேன் என்று மிரட்டினாராம்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications