விளாம்பட்டி துப்பாக்கி சூடு-பாதிக்கப்பட்டோருக்கு அரசு நிதியுதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள விளாம்பட்டியில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சுட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

முதல்வர் கருணாநிதிக்கு திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி கோவில் பிரச்சனை தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் எழுதியுள்ள கடிதம் பரிசீலனை செய்யப்பட்டது.

கடிதத்தில் அவர் செய்துள்ள பரிந்துறைகளை ஏற்றுக் கொண்டு துப்பாகிச் சூட்டில் வலது காலில் பாதப்பகுதி நீக்கப்பட்டுள்ள குணசுந்தரிக்கு ரூ. 1 லட்சமும், துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சிவப்பிரகாசம், சுந்தரம் ஆகியோருக்கு தலா ரூ. 50 ஆயிரமும், தடியடியில் காயமடைந்த மகாராஜன், பன்னீர் ஆகியோருக்கு தலா ரூ. 25 ஆயிரமும் ஆகமொத்தம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவி வழங்கிட முதல்வர் கருணாநிதி அனுமதி அளித்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற பகுதியில் மாவட்ட ஆட்சியாளர், அனைத்துக்கட்சித் தலைவர்கள் கொண்ட அமைதிக்குழுவை ஏற்படுத்திடத்தக்க முயற்சிகளை வருவாய்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு, தடியடி சம்பந்தமாக கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டின் நீதி விசாரணைக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.

மூன்று மாத காலத்திற்குள் நீதி விசாரணை அறிக்கை அரசுக்குக் கிடைக்கும். அதன் பின்னர் அந்த அறிக்கையின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறிப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+