மதுரை: காங். வேட்பாளர் ராஜேந்திரன்தேமுதிக-சிவமுத்துக்குமார்: பாஜக-சசிராமன்

Subscribe to Oneindia Tamil

மதுரை:மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.கே.ராஜேந்திரன் போட்டியிடுவார் என காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.

Sasi - BJP

தேமுதிக சார்பில் சிவமுத்துக்குமார் போட்டியிடுவார் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். பாஜக சார்பில் சசிராமன் போட்டியிடுகிறார்.

Sivamuthukumar - DMDK

அதிமுக சார்பில் செல்லூர் கே.ராஜு போட்டியிடுகிறார்.

தேமுதிக சார்பில் போட்டியிட ஒரு பெண் உள்பட 29 பேர் மனு செய்திருந்தனர். இவர்களில் மதுரை மேற்குத் தொகுதியைச் சேர்ந்த நான்கு பேரிடம் மட்டும் விஜயகாந்த் நேர்காணல் நடத்தினார்.

அதன் பின்னர் சிவமுத்துக்குமார் என்பவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்தவரான முத்துக்குமார் காண்டிராக்டராக இருந்து வருகிறார். பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்.

மதுரை மாநகர துணைச் செயலாளராக இருந்து வரும் முத்துக்குமாருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இன்று காலை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் சிவமுத்துக்குமார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்றிலிருந்து பிரச்சாரத்தில் ஈடுபட போவதாகவும், கட்சியின் தலைவர் விஜயகாந்த் 15ம் தேதி முதல் பிரச்சாரம் செய்யப்போவதாகவும் கூறினார்.

பாஜக வேட்பாளர்:

இதேபோல பாஜக சார்பில் சசிராமன் என்கிற சீத்தாராமன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மதுரை மேற்குத் தொகுதி வேட்பாளராக மதுரை மாவட்ட பாஜக தலைவர் சசிராமன் என்கிற சீத்தாராமன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

தேர்தல் பொறுப்பாளராக மாநில துணைத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டது.

மதுரையில் தையல் மற்றும் ஆயத்த ஆடை நிறுவனத்தை நடத்தி வருகிறார் சீத்தாராமன். மனைவி, ஒரு மகள் உள்ளனர். தீவிர ஆர்.எஸ்.எஸ்.காரர் சீத்தாராமன். 2006ம் ஆண்டு முதல் மதுரை மாவட்ட பாஜக தலைவராக இருந்து வருகிறார்.

காங். வேட்பாளர்:

காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.கே.ராஜேந்திரன் போட்டியிடுவார் என காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.

நாளைதான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஆனாலும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது தெரியாமல் இருந்தது.

இந் நிலைலயில் கே.எஸ்.கே.ராஜேந்திரன் போட்டியிடுவார் என்று கட்சி மேலிடம் இன்று அறிவித்தது. கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி இதுகுறித்த அறிவிப்பை இன்று டெல்லியில் வெளியிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+