மதுரை மேற்கு:வேட்பு மனுத் தாக்கல் முடிந்தது
மதுரைமதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் இன்று மாலையுடன் வேட்பு மனு தாக்கல் முடிந்தது.
மதுரை மேற்கு தொகுதிக்கு வருகிற 26ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 1ம் தேதி தொடங்கியது.
தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் செல்லூர் ராஜுவும், தேமுதிக சார்பில் சிவமுத்துக்குமாரனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே.ராஜேந்திரனும், பாஜக வேட்பாளர் சீத்தாராமனும் இன்று மனு தாக்கல் செய்தனர்.
இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது.
இதையடுத்து நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. 11ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும். 26ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
தேர்தலையொட்டி நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையப் பார்வையாளர் அஜய் தியாகி நேற்று மதுரை வந்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர், காவல்துறை ஆணையர் சுப்ரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் சில வாக்குச் சாவடி மையங்களை அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications