கோடநாடு: கருணாநிதி கூறுவது கற்பனை;விரைவில் ஆதாரங்களுடன் விளக்கம்-ஜெ.
சென்னை:கோடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பாக முதல்வர் கருணாநிதி கூறியும், எழுதியும் வருவது பொய் என்பதை விரைவில் ஆதாரங்களுடன் விளக்குவேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
3வது அணி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஹைதராபாத் சென்றிருந்தார் ஜெயலலிதா. தனது ஹைதராபாத் விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு பத்தேமுக்கால் மணிக்கு சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாட்டில் எத்தனையோ முக்கியப் பிரச்சினைகள் உள்ளன. இதில், கோடநாடு எஸ்டேட் விவகாரம் ரொம்ப முக்கியமானதா. இதுகுறித்து ஆதாரம் இல்லாமல் கற்பனையான குற்றச்சாட்டுக்களைக் கூறியும், எழுதியும் வருகிறார் கருணாநிதி.
விரைவில் இதற்கெல்லாம் தகுந்த ஆதாரங்களுடன் நான் விளக்கமாக பதில் அளிப்பேன்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்க மாட்டோம். யாருக்கு ஆதரவு என்பதை கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி முடிவு எடுப்போம்.
ஹைதராபாத்தில் நடந்த 3வது அணி ஆலோசனைக் கூட்டம் வெகு சிறப்பாக நடந்தது. பல முக்கிய விஷயங்கள் குறித்து அதில் ஆலோசித்தோம்.
இன்னும் ஒரு வாரத்தில், மாநிலக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications