வயல் பாதை தகராறில் விவசாயி சுட்டுக் கொலை
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வயலுக்குச் செல்லும் பாதை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் விவசாயி சுட்டுக் கொல்லப்பட்டார்.
செங்கம் அருகே உள்ள கல்லாத்தூர் மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது தங்கை சாரதா.
சாரதாவுக்குச் சொந்தமான விவசாய நிலத்தின் வழியாகத்தான் ராமன் என்ற விவசாயின் நிலத்திற்குச் செல்ல முடியும். இதுதொடர்பாக ராமனுக்கும், சாரதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் ராமன் நிலத்திற்குச் செல்லும் பாதைய முட்களைப் போட்டு மறித்தார் சாரதாவின் சகோதரர் ஏழுமலை. இதனால் ராமன் கோபமடைந்தார்.
தனது நண்பர் அருளிடம் இதுகுறித்துக் கூறினார். இதையடுத்து அருள் தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஏழுமலை வீட்டுக்குச் சென்றார். அங்கு அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் தனது துப்பாக்கியால் ஏழுமலையை சுட்டுள்ளார்.
இதில் நெஞ்சில் குண்டு பாய்ந்து ஏழுமலை சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து ஏழுமலை உடலை மீட்டனர். அருள் மற்றும் ராமனை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications