ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்புமீண்டும் தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை:சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் வருகிற 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராமசாமி அறிவித்தார்.
சென்னை சேத்துப்பட்டில் இருந்த ஆர்.எஸ்.எஸ்.அலுவலகம் கடந்த 1993ம் ஆண்டு குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இதில், 11 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக அல் உம்மா தலைவர் பாட்ஷா உள்பட 18 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதில் பாட்ஷா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் இமாம் அலி சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார். பழனிபாபா படுகொலை செய்யப்பட்டு விட்டார். முஷடாக் அகமது தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். மற்றவர்கள் சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கை தனி நீதிமன்ற நீதிபதி ராமசாமி விசாரித்து வந்தார்.வழக்கு விசாரணை முடிவடைந்து ஏப்ரல் 18ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது.பின்னர் மே 9ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜூன் 11ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் எனக் கூறப்பட்டது.
இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பு தயாராகவில்லை என்று கூறிய நீதிபதி ராமசாமி ஜூன் 21ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்து அறிவித்தார்.
இந்த வழக்கில் மொத்தம் 431 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதிசாட்சிகள் விசாரணை தொடங்கியது. 1994ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications