கிரிக்கெட் பயிற்சியாளர் பதவியைநிராகரித்தார் போர்டு-எம்புரேவும் எஸ்கேப்
லண்டன்:இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க இயலாது என தென் ஆப்பிரிக்காவின் கிரகாம் போர்டு கூறி விட்டார். அதேபோல, இங்கிலாந்தின் ஜான் எம்புரேவும் பயிற்சியாளர் பதவியை ஏற்க முடியாது என்று கூறி விட்டார். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்ய வாரியத் தலைவர் சரத்பவார் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு டேவ் வாட்மோர், அர்ஜூன ரணதுங்கா உள்ளிட்ட பலருடைய பெயர்களைப் பரிசீலித்தது. இறுதியில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிரகாம் போர்டு, இங்கிலாந்தின் ஜான் எம்புரே ஆகியோரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டன.
![]() |
சென்னையில் கூடிய தேர்வுக் குழுக் கூட்டத்திற்கு இருவரும் அழைக்கப்பட்டு தனித் தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கிரகாம் போர்டு புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வாரியத்தின் பொருளாளர் சீனிவாசன் அறிவித்தார்.
ஆனால் கிரிக்கெட் வாரியத்திற்கு அதிரிச்சி அளிக்கும் வகையில் இப்பதவியை ஏற்க முடியாது என்று கூறி விட்டார் போர்டு. போர்டு தற்போது இங்கிலாந்தின் கவுண்டி அணியான கெண்ட் அணியின் பயிற்சியாளராக உள்ளார். அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்புவதாகவும், அதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வாய்ப்பை ஏற்க இயலாத நிலையில் உள்ளதாகவும் போர்டு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், தீவிர பரிசீலனைக்குப் பின்னர் கெண்ட் அணியின் பயிற்சியாளராக தொடர முடிவு செய்துள்ளேன். மிகுந்த சிரமத்திற்கிடையே இந்த முடிவை எடுத்துள்ளேன். என் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் வைத்த நம்பிக்கை எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. ஆனால் எனது குடும்பத்தினருக்காக நான் இந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார் போர்டு.
இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்புவதாக வாட்மோர் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.ஆனால்அவரை சில மூத்த வீரர்கள் விரும்பவில்லை.இதனால் வாட்மோரை கண்டு கொள்ளவில்லை கிரிக்கெட் வாரியம்.
ஆனால்,ஒரு சர்வதேச போட்டியில் கூட விளையாடிய அனுபவம் இல்லாத கிரகாம் போர்டை தேர்வு செய்தது. இதற்கு ஒரே காரணம்,கிராகம் போர்டு வேண்டும் என்று கேப்டன் டிராவிடும், மூத்த வீரர்களும் கேட்டதால்.
நேர்காணலுக்கு வந்த அனுபவம் வாய்ந்த ஜான் எம்புரேவையும் இந்திய கிரிக்கெட் வாரியம் நிராகரித்து விட்டது. ஆனால் அவரும் தன் பங்குக்கு கிரிக்கெட் வாரியத்திற்கு கடுப்படித்துள்ளார். போர்டு நிராகரித்து விட்ட நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்பவில்லை என்று கூறி விட்டார் எம்புரே.
போர்டும்,எம்புரேவும் பயிற்சியாளர் பதவியை நிராகரித்து விட்டதால் கிரிக்கெட் வாரியம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கிரிக்கெட் வாரியம் ஆலோசிக்கவுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications