கோடநாடு எஸ்டேட்-கருணாநிதி கவிதை
சென்னை:சர்ச்சைக்குரிய கோடநாடு எஸ்டேட் குறித்து முதல்வர் கருணாநிதி கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
கருணாநிதியின் கோடநாடு எஸ்டேட் கவிதை ..
"காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்
பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிக்கைப் பெண்ணே"
பாரதிதாசன் பாராட்டிப் பாடினார் உன்னை இப்படி! அதற்கு
நேர் எதிராக இப்போது நடக்கிறாய்; அது எப்படி?
ஆட்சியிலிருந்த அதிமுகவின் அராஜகப் பட்டியலில்
சூழ்ச்சியால் கவர்ந்து கட்டியது கோடநாடு அரண்மனை!
மலைப் பகுதியில் மண் வீடு கட்டுவதற்கே மலை மலையாய் விதிமுறைகள் தொல்லை!
மாளிகை யொன்றைக் கட்டியதற்கு மறுப்பேதுமில்லை தடுப்பாருமில்லை!
மளமளவென்று மாளிகையும் எழுப்பி-
மரங்கள் இரண்டாயிரத்தையும் வெட்டியே பரப்பி;
மவுனம் சாதித்தே மழுப்பிடலா மென்றும்
தருணம் பார்த்தே தட்டிக் கொண்டார் தமிழரசின் சொத்துக்களை!
தனக்கு வேண்டியவர் வீடெனக் கூறி
தப்பிக்க நினைத்தார் முதலில்!
ஆதார ஆவணங்களை அடுக்கடுக்காக
அடியேன் எடுத்துக் காட்டியதும்;
அய்யோ, அய்யோ என்று அலறியபடி
அப்படியே அதை விட்டு விட்டார்!
இன்னும் என்னென்னவோ; இனிய நீரோடை ஒன்றுள்ளதாம் ஆங்கே!
கண்ணைக் கவரும்படி விண்ணைத் தொட்டபடி மக்கள் விழியில்;
மண்ணைத் தூவியபடி சிரிக்கின்ற மயன் மாளிகை-பத்திரிக்கைப்
பெண்மையுமன்றோ கண்ணை மூடிக் கிடக்கச் செய்து விட்டது அந்த மாய மாளிகை!












Click it and Unblock the Notifications