ஒரு மேடை, 2 காதலிகள், 2 தாலிதிருவண்ணாமலையில் ஒரு அதிசய கல்யாணம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு வாலிபர் தான் காதலித்து வந்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் கல்யாணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மடூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (32). இவர் ஒரு விவசாயி. இவருக்கும், பக்கத்து வயலைச் சேர்ந்த மாயவன் என்பவரின் மகள் சகுந்தலாவுக்கும் (24) காதல் மலர்ந்தது. நெருங்கிப் பழகிய இருவரும் கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
![]() |
இந்த நிலையில் இன்னொரு காதலில் வீழ்ந்தார் ஏழுமலை. ஏழுமலையின் வீட்டுக்கு அருகில் உள்ள அண்ணாமலையின் மகள் நாகம்மாள் (23) என்பவரையும் சைட் பை சைடாக காதலிக்க ஆரம்பித்தார் ஏழுமலை.
ஏழுமலையின் இரட்டைக் காதல் அவரது இரு காதலிகளுக்கும் தெரிய வந்தது. ஏழுமலையை நேரில் சந்தித்த இருவரும் எங்களில் யாரைத் திருமணம் செய்யப் போகிறீர்கள் என்று கேட்டனர்.
அதற்கு படு தெளிவாக, இரண்டு பேரையும்தான் என்று கூறியுள்ளார் ஏழுமலை. இதையடுத்து இரு பெண்களும் சமாதானமடைந்தனர், சம்மதமும் கொடுத்தனர்.
ஆனால் இரு பெண்களின் வீட்டாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எப்படி ஒருவரே இரு பெண்களையும் மணப்பது என அவர்கள் ெகாதித்தனர். ஆனால் ஏழுமலையின் குடும்பத்தினர் இரு பெண்களின் வீட்டாரையும் சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து கடந்த 3ம் தேதி மூன்று வீட்டாரும் கூடி பேசி திருமண தேதியை முடிவு செய்தனர். ஒரே நாளில், ஒரே முகூர்த்தத்தில், ஒரே மேடையில் கல்யாணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 3ம் தேதி இடப்புறம் அமர்ந்திருந்த சகுந்தலாவுக்கும், வலப்புறம் அமர்ந்திருந்த நாகம்மாளுக்கும் மாறி மாறி தாலி கட்டி அசத்தினார்.
இந்த வித்தியாச திருமணம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏழுமலை ரஜினி ரசிகராம். இதனால் அவரது நண்பர்கள் வைத்த கல்யாண விளம்பர டிஜிட்டல் போர்டில் ரஜினிகாந்த் ஏழுமலை மற்றும் இரு மணமகள்களையும் ஆசிர்வாதம் செய்வது போல சித்தரிக்கப்பட்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications