அணியிலிருந்து நீக்கம்-முனாப் படேல் டென்சன்
ஜெய்ப்பூர்:சென்னையில் எம்ஆர்எப் பவுண்டேஷனில் சிறப்பு பயிற்சி எடுத்து எனது திறமையை அடுத்த போட்டியில் நிச்சயம் நிரூபிப்பேன் என இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் முனாப் படேல் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியினர் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து செல்ல இருக்கின்றனர். இந்த அணியில் முனாப் படேல் இடம் பெறவில்லை.
முனாப் படேல் முழுத் தகுதியுடன் இல்லாததால் அவரை தேர்ந்தெடுக்கவில்லை என தேர்வு குழு தலைவர் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.
இதனால் எரிச்சலான படேல் தனது சொந்த கிராமமான குஜராத்திலுள்ள பரூக் மாவட்டத்திலுள்ள இகாருக்கு சென்று விட்டார்.
இதுகுறித்து படேல் கூறுகையில், நான் முழு தகுதியுடன் இருந்தும் என்னை தேர்ந்தெடுக்கவில்லை. காரணம் என்னவென்று தெரியவில்லை.
சொந்த ஊரில் சில நாட்கள் ஓய்வெடுத்த பிறகு, சென்னையிலுள்ள எம்ஆர்எப் பவுண்டேஷனின் சிறப்பு பயிற்சி எடுக்கவுள்ளேன். அடுத்த போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்று எனது திறமையை நிச்சயம் நிரூபிப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications