மதுரை- புதிய கலெக்டர், கமிஷ்னர் பொறுப்பேற்பு
மதுரை:தேர்தல் கமிஷனின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தின் புதிய கலெக்டராக சுந்தரமூர்த்தி இன்று பதவியேற்றார். அதே போல போலீஸ் கமிஷ்னராக தென் மண்டல ஐஜி சஞ்சீப் குமாரும் சட்டம் ஒழுங்குப் பிரிவின் துணை கமிஷ்னராக திண்டுக்கல் எஸ்.பி பாரியும் பொறுப்பேற்றனர்.
மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலை அமைதியாக நடத்த அங்குள்ள பாரபட்சமான (திமுக ஆதரவு) அதிகாரிகளை தூக்கி அடித்தது தேர்தல் ஆணையம்.
ஆட்சித் தலைவர் ஜவஹர், மாநகர காவல்துறை ஆணையர் சுப்பிரமணியம், தேர்தல் நடத்தும் அதிகாரியான கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) நாராயணசாமி, சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ராமராஜன், தல்லாகுளம் உதவி ஆணையர் ராஜேந்திரன், தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமிக்க ஒவ்வொரு பதவிக்கும் 3 பேரை பரிந்துரை செய்யும்படியும் தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து இந்தப் பதவிகளுக்கு தலா 3 பேர்கள் கொண்ட பட்டியலை தமிழக அரசு வழங்கியது.
அந்தப் பட்டியலில் இருந்து சஞ்சீவ் குமாரை கமிஷ்னராகவும், பாரியை சட்டம் ஒழுங்கு துணை கமிஷ்னராகவும் ஆணையம் நியமித்துள்ளது. இருவரும் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுவிட்டனர்.
அதே போல நாமக்கல் மாவட்ட கலெக்டர் சுந்தரமூர்த்தி இன்று மதுரை கலெக்டராக பொறுப்பேற்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications