தேர்தல் ஆணையம் மீது கருணாநிதி சந்தேகம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:பிரசவத்திற்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போலீஸ்காரரின் மனைவி பிரசவத்திற்குப் பின் மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடியில் உள்ள சிறப்புக் காவல் படை காவலரின் மனைலவி கீதா.
கர்ப்பிணியாக இருந்த கீதா நான்கு நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந் நிலையில் இன்று காலை மருத்துவமனையின் 3வது மாடிக்குச் சென்றார் கீதா. பின்னர் அங்கிருந்து கீழே குதித்தார். இதில் தலை சிதறி பரிதாபமாக இறந்தார் கீதா.
இதைப் பார்த்து மருத்துவமனை வளாகத்தில் இருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். போலீஸார் விரைந்து வந்து கீதாவின் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் ஏன் தற்கொலை கொண்டார் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications