தண்ணீர், தண்ணீர்..! இஸ்ரேலை நாடும் தமிழகம்
சென்னை:தமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க இஸ்ரேல் நாட்டுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இஸ்ரேல் நிறுவனங்களிடம் உதவியையும் கோரியுள்ளது.
தென்னிந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் இஸ்ரேல் தூதரகம் சார்பில் தண்ணீர்: நகர்ப்புற தமிழகத்தின் பார்வை என்ற பெயரில், ஒரு கருத்தரங்கம் சென்னையில் நடந்தது.
இந்த கருத்தரங்கில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள நகரங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான தண்ணீரைப் பெற இயற்கைய வளத்தையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. வேறு வழி தமிழகத்திற்கு இல்லை.
எதிர்காலத்தில் தண்ணீர்ப் பிரச்சினை விஸ்வரூபம் எடுப்பதற்குள் இப்போதே மாற்று வழிகளை காணவும், நீண்ட காலத் திட்டங்களை நிறைவேற்றவும் உகந்த நேரம் வந்து விட்டது.
இஸ்ரேலில் தண்ணீர் வளம் மிகவும் குறைவு. ஆனால் அவர்கள் தண்ணீர்ப் பற்றாக்குறைய மிகத் திறமையாக சமாளித்து வெற்றி கண்டுள்ளனர். எனவே இஸ்ரேலின் நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை தமிழகத்திலும் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.
இதுதொடர்பாக இஸ்ரேல் நிறுவனங்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது என்றார் துரைமுருகன். நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியும் நிகழ்ச்சியில் பேசினார்.
மும்பையில் உள்ள இஸ்ரேல் துணைத் தூதரக அதிகாரி டேணியல் ஜோகர் சோன்ஸைன் பேசுகையில், அதி நவீன தொழில்நுட்பம் மூலம் இஸ்ரேல் தனது தண்ணீர்ப் பிரச்சினைய தீர்த்துக் கொண்டுள்ளது.
இதே தொழில்நுட்பத்தை தமிழகத்திற்கும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தண்ணீர் சுத்திகரிப்பு, வடிகட்டுதல், மழை நீர் வடிகால் உள்ளிட்டவற்றில் தமிழக அரசுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications