என் மகன் ஆபரேஷன் செய்யவில்லைமணப்பாறை டாக்டர் மறுப்பு
திருச்சி: எனது மகன் கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிசேரியன் ஆபரேஷன் செய்யவில்லை. நானும், எனது மனைவியும்தான் செய்தோம் என்று சர்ச்சையில் சிக்கியுள்ள மணப்பாறை டாக்டர் முருகேசன் கூறியுள்ளார்.
மணப்பாறையில் உள்ள முருகேசன்-காந்திமதி மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டர் முருகேசன், டாக்டர் காந்திமதியின் மகன் திலீபன் ராஜ். 15 வயதாகும் திலீபன் ராஜ், 11வது வகுப்பு படித்து வருகிறான்.
மே 6ம் தேதி மணப்பாறை பிரிவு இந்திய டாக்டர்கள் சங்க கூட்டம் நடந்த போது, முருகேசன் ஒரு சிடியைப் போட்டுக் காட்டினார். அதில் கர்ப்பிணி ஒருவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பது போன்ற காட்சி இருந்தது.
![]() |
இதுகுறித்து விளக்கிய முருகேசன், இந்த ஆபரேஷனை எனது மகன் திலீபலன்தான் செய்தான் என்று கூறியபோது அத்தனை பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இதை கின்னஸ் சாதனைக்காகத்தான் எனது மகன் செய்தான், இதில் தவறு இல்லை என்று டாக்டர் முருகேசன் கூறி வருகிறார்.
![]() |
இந்த நிலையில் இதுகுறித்து விவாதிக்க ஆர்.டி.ஓ.வுக்கு உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசிஷ் வச்சானி. இதையடுத்து ஆர்.டி.ஓ விசாரணை நேற்று தொடங்கியது.
ஆர்.டி.ஓ. ரமணீதரன், திருச்சி மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் எழிலரசி பக்ருதீன், உதவி இயக்குநர் வீரபாண்டி, மணப்பாறை தாசில்தார் ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய குழு முருகேசன் மருத்துவமனைக்குச் சென்று விசாரணையைத் தொடங்கினர்.
ஆர்.டி.ஓ. விசாரணையின்போது டாக்டர் முருகேசன் கூறுகையில், நான் மணப்பாறையிலேயே பிறந்து, மணப்பாறையிலே வளர்ந்தவன். எனது படிப்பு எனது ஊர் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக பாடுபட்டு வருகிறேன். அதனால்தான் நானும் எனது மனைவியும் இங்கு மருத்துவமனை கட்டி இந்த ஊர் மக்களுக்கு சேவை புரிந்து வருகிறோம்.
![]() |
கடந்த 17 வருடங்களாக இந்த மருத்துவமனையை நடத்தி வருகிறோம். இதுவரை எந்தப் புகாரும் எங்கள் மீது வந்ததில்லை.
சம்பவ நாளன்று மணப்பாறை அருகே உள்ள சின்னக்குளத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி நீலாவுக்கு பிரசவம் பார்த்தோம். இந்த பிரசவத்தை நானும், எனது மனைவியும்தான் பார்த்தோம். இதில் எங்களது மகனுக்கு சம்பந்தம் இல்லை.
வழக்கமாக நானும், எனது மனைவியும் மட்டுமே பிரசவ கேஸ்களைப் பார்ப்போம். தேவைப்பட்டால் வெளியிலிருந்து சிறப்பு மருத்துவர்களை அழைத்து வருவோம்.
இதுதான் நடந்தது. எனது மகனுக்கு மருத்துவ சிகிச்சைகளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு. ஆனால் அவன் இந்த அறுவைச் சிகிச்சையை செய்யவில்லை என்று கூறியுள்ளார் முருகேசன்.
இதற்கிடையே, முருகேசன் டாக்டர்களுக்குப் போட்டுக் காட்டிய சிடியைக் கைப்பற்ற அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். அது கிடைத்தால் உண்மை என்ன என்பது தெரிய வரும் என அதிகாரிகள் நம்புகிறார்கள்.
இந்த நிலையில் முருகேசனின் வாக்குமூலத்தை மணப்பாறை இந்திய டாக்டர்கள் சங்கம் மறுத்துள்ளது. அவர் பொய் சொல்வதாக அது கூறியுள்ளது. சங்க செயலாளர் டாக்டர் வெங்கடபிரசாத் இதுகுறித்துக் கூறுகையில், தன்னையும், தனது மகனையும் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார் டாக்டர் முருகேசன்.
வீடியோ படத்தைப் போட்டுக் காட்டிய டாக்டர் முருகேசன், இது தனது மகன் செய்த அறுவைச் சிகிச்சை என்று கூறினார். அப்போது அப்படிக் கூறி விட்டு இப்போது மறுப்பது கண்டனத்துக்குரியது என்றார் வெங்கடபிரசாத்.
அன்புமணி கடும் எச்சரிக்கை:
இதற்கிடையே, டாக்டர் முருகேசன் மற்றும் அவரது மகன் திலீபன் ராஜ் ஆகியோர் தவறு செய்திருப்பது தெரிய வந்தால் மாநில சுகாதாரத் துறை மூலம் அவர்கள் மீது கடும் நடசவடிக்கை எடுக்கப்படும், தண்டனை அளிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.















Click it and Unblock the Notifications