மதுரையில் வீதி வீதியாக கனிமொழி பிரசாரம்
மதுரை:மதுரை மேற்குத் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து முதல்வர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தார்.
நேற்று மதுரை வந்த கனிமொழி காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராஜேந்திரனை ஆதரித்து திறந்த ஜீப்பில் நின்றபடி வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தார்.
![]() |
ஞானஒளிவுபுரம், பொன்னகரம், கரிமேடு, ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிளில் அவர் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் மு.க.அழகிரியின் மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, அமைச்சர் தமிழரசி, மத்திய அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் சென்றனர்.
பிரசாரத்தின்போது கனிமொழி பேசுகையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டு வரும் ஒரே இயக்கம் திமுகதான். பெண்களுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காவும் பாடுபட்டு வரும் இயக்கம் திமுக.
தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருவது திமுக. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை மீட்டுத் தந்தவர் கலைஞர். தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை தேர்தல் முடிந்தவுடனேயே நிறைவேற்றிய சாதனைக்குரியது திமுக அரசு.
இந்த சாதனைகள் தொடர மதுரை மேற்கில் திமுக ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும், வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் கனிமொழி.













Click it and Unblock the Notifications