பிரதீபாவின் ராஜினாமா-கலாம் ஏற்பு
டெல்லி:காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதீபா பாட்டீலின் ஆளுனர் பதவி ராஜினாமாவை குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஏற்றுக் கொண்டார்.
ராஜஸ்தான் மாநில ஆளுநர் பொறுப்பையும் சேர்த்து கவனிக்குமாறு ஹரியாணா மாநில கவர்னர் டாக்டர் கித்வாய்க்கு கலாம் உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி, ராஜஸ்தான் ஆளுனர் பிரதீபா பாட்டீலை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவித்தது. இதையடுத்து பிரதீபா பாட்டீல் தனது ஆளுனர் பதவியை ராஜினாமா செய்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி கலாமை சந்தித்து தனது ராஜினாமா கடித்தத்தை கொடுத்தார்.
இதையடுத்து பிரதீபாவின் பாட்டீலின் ஏற்றுக் கொண்ட கலாம் ஹரியானா ஆளுனர் டாக்டர். கித்வாயிடம் கூடுதல் பொறுப்பாக ராஜஸ்தான் ஆளுனர் பதவியையும் கவனத்துக் கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார் என ஜனாதிபதி மாளிகையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
