மதுரை மேற்கு: கோபால்சாமி அதிருப்தி
மதுரை:மதுரைக்கு வந்த தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, விமான நிலையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி நேற்று திடீரென மதுரைக்கு வந்தார். விமான நிலையத்தில் மதுரை மேற்குத் தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் அஜய் தியாகி, கணேஷ் ராவ் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுந்தரமூர்த்தி, காவல்துறை ஆணையர் சஞ்சீவ் குமார், தேர்தல் அதிகாரி திணேஷ் பொன்ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அவர்களுடன் கோபால்சாமி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர். அவர்களிடம் கோபால்சாமி பேசுகையில், மதுரை மேற்குத் தொகுதியின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்த அறிக்கையை, தேர்தல் பார்வையாளர்கள் இன்னும் தரவில்லை. அதற்கு அவகாசம் இன்னும் இருக்கிறது என்றார் கோபால்சாமி.
பின்னர் அவர் அங்கிருந்து ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக ராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கோபால்சாமி அங்கு பேசுகையில், மதுரை மேற்குத் தொகுதியில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து இன்னும் திருப்தி ஏற்படவில்லை. இதுதொடர்பாக தமிழக அரசு நடந்து கொண்ட விதம் வேதனை அளிப்பதாக உள்ளது.
திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறுமா என்பதை அறிய நாளை (இன்று) வரை காத்திருங்கள் என்றார் கோபால்சாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications