வேட்பு மனு தாக்கல் செய்தார் ஷெகாவத்
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 19ம் தேதி நடைபெறுகிறது. இதில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-இடதுசாரிகள் சார்பில் முன்னாள் ராஜஸ்தான் ஆளுநர் பிரதீபா பாட்டீல் நிறுத்தப்பட்டுள்ளார்.
பிரதீபா பாட்டீல் சமீபத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரான பைரான் சிங் ஷெகாவத் இன்று முற்பகல் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தேர்தல் அதிகாரியான ஆச்சார்யாவிடம் தனது வேட்பு மனுவை அளித்தார் ஷெகாவத். அப்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக மூத்த தலைவர் அத்வானி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அனைத்து மாநிலங்களுக்கும் போய் வாக்கு சேகரிக்கப் போவதாக பின்னர் ஷெகாவத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications