போதையில் மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள்
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்:
திருவள்ளூரில் குடித்து விட்டு வந்து மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
திருவள்ளூரைச் சேர்ந்தவர் தாஸ்(32). இவரது மனைவி வயலட் ராணி (28). தினரி குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம் தாஸ். இதுதொடர்பாக கணவனுக்கும், மனைவிக்கும் இடையே சண்டை நடப்பது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி வயலட் ராணியை கொடூரமான முறையில் கொலை செய்ததாக தாஸ் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாஸ் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. இதில், தாஸுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications