இங்கிலாந்து பிரதமர் ஆனார் கார்டன் பிரவுன்

Subscribe to Oneindia Tamil

லண்டன்:இங்கிலாந்து புதிய பிரதமராக ஜேம்ஸ் கார்டன் பிரவுன் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த 10 வருடங்களாக இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் இருந்து வந்த டோணி பிளேர் நேற்றுடன் பதவி விலகினார்.

Brown

புதிய பிரதமராக நிதியமைச்சர் பிரவுன் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று பிரவுன் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

முன்னதாக, நேற்று முற்பகல் 11.15 மணிக்கு நாடாளுமன்றத்திற்குச் சென்ற பிளேர் அங்கு பிரதமர் என்ற முறையில் கடைசியாக உரை நிகழ்த்தினார். பின்னர் தனது உரையை முடித்துக் கொண்டு அனைவருக்கும் நன்றி கூறி விட்டு வெளியே வந்தார்.

அங்கிருந்து நேராக இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்திப்பதற்காக பக்கிங்காம் அரண்மனைக்குச் சென்றார். சுமார் 22 நிமிடங்கள் நடந்த அந்த சந்திப்பின்போது தனது ராஜினாமா கடிதத்தை ராணியிடம் கொடுத்தார் பிளேர். பின்னர் தனது மனைவி செர்ரியுடன் வெளியேறிய அவர் சாதாரண எம்.பியாக கிளம்பிச் சென்றார்.

பிளேர் பதவியை ராஜினாமா செய்து விட்டுச் சென்ற சில நிமிடங்களில் பிரவுன் பக்கிங்காம் அரண்மனைக்கு விரைந்தார். அங்கு அவருக்கு ராணி எலிசபெத் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

56 வயதாகும் பிரவுன், கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் தொழிலாளர் கட்சித் தலைவராக பதவியேற்றார். இந்தியாவின் நண்பன் என்று அடிக்கடி சொல்லிக் கொள்பவர் பிரவுன். எனவே இவரது பதவிக்காலத்தில் இந்தியாவுடனான இங்கிலாந்தின் நட்பு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் பிரவுன். இவரது தந்தை ஒரு போதகர். கடந்த 24 வருடங்களாக அரசியலில் இருக்கிறார் பிரவுன். இவர் நிதியமைச்சராக இருந்தபோது பொருளாதார வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் தென்பட்டது. இருப்பினும், கடனுக்கான வட்டி விகிதங்கள் கிடுகிடுவென ஏறியதால் இங்கிலாந்தில் வீடுகளின் விலையும் பெருமளவு அதிகரித்தது.

ஈராக் போரின்பாது பிளேர் எடுத்த முடிவு தவறு என்ற கருத்து பெரும்பாலான இங்கிலாந்துக்காரர்களிடம் உள்ளது. இதனால்தான் பிளேர் மற்றும் தொழிலாளர் கட்சியின் செல்வாக்கு, கிடுகிடுவென சரிந்தது. தற்போது பிரதமராகியுள்ள பிரவுன், இழந்த செல்வாக்கை மீட்கும் முயற்சிக்கு முக்கியத்துவம் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் பொதுத் தேர்தல் நடக்காமல் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுவது இதுவே முதல் முறையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+