பெண் கலெக்டரை அழ வைத்த எம்எல்ஏக்கள்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:மழை வெள்ள நிவாரண நிதி விநியோகம் தொடர்பாக எம்.எல்.ஏக்கள் சரமாரியாக கேள்விகள் கேட்டதால், கோட்டயம் மாவட்ட ஆட்சித் தலைவரான டாக்டர் ஷர்மிளா மேரி கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Collector Sharmila Mary

கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பருவ மழை தீவிரமடைந்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெரும் பொருட் சேதமும் ஏற்பட்டது.

மழை, வெள்ளத்திற்குப் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

Collector Sharmila Mary

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோட்டயம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் டாக்டர் ஷர்மிளா மேரி தலைமையில் நடந்தது.

இதில் எம்.எல்.ஏக்கள் தாமஸ், சி.எப்.ஜார்ஜ், ஜார்ஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் பலர், நிவாரணப் பொருட்கள், நிதியுதவி உள்ளிட்டவை கிடைப்பதில் தாமதம் இருப்பதாக கூறினர்.

Collector Sharmila Mary

இதைக் கேட்ட எம்.எல்.ஏக்கள், தங்கள் மீது மக்களின் அதிருப்தி திரும்பி விடுமோ என பயந்து, இதற்கெல்லாம் முக்கிய காரணம் மாவட்ட ஆட்சித் தலைவர்தான் என்று கூறி ஆட்சித் தலைவர் மீது பழியைப் போட்டனர்.

எல்லாத் தவறுக்கும் தன் மீது எம்.எல்.ஏக்கள் பழி போட்டதையடுத்து ஆட்சித் தலைவர் மேரி அதிர்ச்சி அடைந்து அழ ஆரம்பித்து விட்டார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் பேசிய ஆட்சித் தலைவர், அரசுத் தரப்பிலிருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு உதவிகள் வருவதில் ஏற்பட்டுள்ள தாமதம்தான் நிவாரண உதவிகளை உரிய நேரத்தில் வழங்க முடியவில்லை என்று விளக்கினார்.

எம்.எல்.ஏக்களின் புகாரால் ஆட்சித் தலைவர் அழுதது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+