17 வயது மாணவி கடத்தல்-காதலனுக்கு வலை!
சென்னை:தங்கை முறை வரும் 17 வயது மாணவியை காதலித்து, அவரைக் கடத்திச் சென்று விபச்சாரக் கும்பலிடம் விற்று விட்டதாக கூறப்படும் அந்த மாணவியின் காதலரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
சென்னை, செம்பியத்தை சேர்ந்தவர் ராஜி(48). இவர் மருத்துவமனை ஒன்றில் கேண்டீன் வைத்து நடத்தி வருகிறார். இவரது ஒரே மகள் கோமதி(17) ப்ளஸ் ஒன் படித்து வருகிறார்.
கடந்த 22ம் தேதி தனது மகளுடன் பள்ளிக்கரணையில் உள்ள உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு சென்றார் ராஜி. கல்யாணம் முடிந்த பின்னர் வீட்டுக்குக் கிளம்பினார். அப்போது மகளைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கும் இங்கும் தேடினார்.
மகள் கிடைக்காததால், காவல்துறை ஆணையர் லத்திகா சரணிடம் புகார் கொடுத்தார். இந்த நிலையில் ராஜிக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், கோமதி கும்பகோணத்தில் என்னுடன் தான் இருக்கிறாள். அவள் வேண்டுமானால் ரூ.5 லட்சம் கொடுத்து விட்டு மீட்டுச் செல்லுங்கள் என சொல்லி விட்டு போனை வைத்துள்ளார்.
தொலைபேசியில் பேசியவர் செந்தில்குமார் என்று தெரிய வந்தது. இவர் கோமதிக்கு அண்ணன் முறை வருமாம். ஆனால் அந்த உறவுமுறையை மறந்து விட்டு இருவரும் காதலித்துள்ளனர்.
செந்தில்குமார் போனில் பேசியதைத் தொடர்ந்து தனிப்படை கும்பகோணம் விரைந்தது. ஆனால் அங்கு செந்தில்குமார், கோமதி இல்லை. இதையடுத்து போலீஸார் அங்கிருந்து திரும்பி விட்டனர். செந்தில்குமார் பெங்களூரில் இருக்கக் கூடும் என கூறப்படுவதால் அங்கும் ஒரு படை சென்றுள்ளது.
கோமதி விபச்சாரக் கும்பலிடம் விற்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். செந்தில்குமாருக்கு தாய், தந்தை கிடையாது. உறவினரான ஒரு பெண்ணிடம்தான் வளர்ந்துள்ளார். அந்தப் பெண் பல பெண்கள வைத்து விபச்சாரம் நடத்தி வந்துள்ளார். அவர் சொல்லித்தான் கோமதியைக் காதலிப்பது போல நடித்துள்ளார் செந்தில்குமார் என்றும் கூறப்படுகிறது.
செந்தில்குமாரின் நாடகத்தை நம்பிய கோமதி அவரிடம் ரூ. 1 லட்சம் பணத்தையும் கொடுத்துள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications