மதுரை மேற்கு: நாளை வாக்கு எண்ணிக்கை11 மணிக்குள் முடிவு தெரியும்
மதுரை:மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படவுள்ளது. 11 மணிக்குள் முடிவு தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மேற்குத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நடந்தது. தமிழக தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக பீகார், உ.பி. மாநில பாணியில், முற்றிலும் மத்திய துணை ராணுவப் படையின் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புடன் மதுரை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
நாளை காலை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். மின்னணு வாக்குப் பதிவு என்பதால் முற்பகல் 11 மணிக்குள் முடிவு தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கைக்கான பாதுகாப்புப் பணியிலும் துணை ராணுவப் படையினரே பயன்படுத்தப்படவுள்ளனர். வெளிப் பாதுகாப்பில் மட்டும் தமிழக போலீஸார் பயன்படுத்தப்படுவர்.
இதற்கிடையே, 85 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவான 23 வாக்குச் சாவடிகளில் மத்திய தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 85 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகியிருந்தால் அந்த வாக்குச் சாவடிகளில் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதிமுறை.
அந்த வகையில், நேற்று தேர்தல் பார்வையாளர்கள் அஜய் தியாகி, கணேஷ் ராவ், சிவசங்கர், மாவட்ட ஆட்சித் தலைவர் சுந்தரமூர்த்தி, தேர்தல் அதிகாரி திணேஷ் ஆலிவர் பொன்ராஜ் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு நடந்தது. வேட்பாளர்கள் முன்னிலையில் ஆய்வு நடந்தது.
வாக்காளர்கள் காட்டிய ஆவணங்கள், அவர்களின் கையெழுத்து, பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரி பார்க்கப்பட்டன. அதேபோல, வாக்குப்பதிவின் புகார் கூறப்பட்ட வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் குறித்த விவரமும் சரி பார்க்கப்பட்டது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு விரிவான அறிக்கை அனுப்பப்படும் என்று தேர்தல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications