எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் வெளியீடுஊரக மாணவர்கள் அசத்தல்
சென்னை:எம்.பி.பி.எஸ். படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னையைச் சேராத பிற பகுதி மாணவர்கள் 7 பேர் முதலிடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இதனை வெளியிட்டார்.
அதன்படி முதல் ரேங்க்கை கோவை மாவட்டம் குனியமுத்தூரைச் சொந்த ஊராகக் கொண்டு ராசிபுரத்தில் படித்த மாணவன் பிரவீன் குமார் பெற்றுள்ளார்.
2வது ரேங்க் நாமக்கல்லைச் சேர்ந்த நித்தியானந்தனுக்குக் கிடைத்துள்ளது. 3வது ரேங்க் ஓசூரைச் சேர்ந்த கார்த்திகேயன் பெற்றுள்ளார். 4வது ரேங்க்கில் கோவையைச் சேர்ந்த மீனா தேறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜெரீனா சேகர் 5வது ரேங்க் பெற்றுள்ளார். 6வது ரேங்க் ராமநாதபுரம் மாவட்டம் வெள்ளிப்பட்டனத்தில் படித்த தஷீன் நிலோபருக்குக் கிடைத்துள்ளது. 7வது ரேங்க்கை பொள்ளாச்சி அஸ்வின் குமார் பெற்றுள்ளார்.
முழமையான ரேங்க் பட்டியல www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கட் ஆப் மதிப்பெண்
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண் விவரத்தையும் அமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி பொதுப் பிரிவினருக்கு 197 ஆக கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்ப்பட்ட வகுப்பினருக்கு 194.50, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 191.50, தாழ்த்தப்பட்டோருக்கு 187.25, பழங்குடியினருக்கு 179 என கட் ஆப் மதிப்பெண் இருக்கும்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1398, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 154 என மொத்தம் 1552 மாணவர் இடங்கள் உள்ளன. இவற்றில் சேர 12 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பல் மருத்துவத்தைப் பொருத்தவரை அரசுக் கல்லூரிகளில் 100 இடங்கள் உள்ளன. இதுதவிர தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 326 இடங்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications