இலங்கையைப் பிரிக்க மாட்டோம்-அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்:

இலங்கையைப் பிரிக்காமல், தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும். அதைத்தான் அதிபர் ராஜபக்ஷே செய்து வருகிறார். தனி ஈழம் தர மாட்டோம் என்று இலங்கை தோட்டக்கலைத் துறை அமைச்சர் மில்ராய் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

தமிழகம் வந்துள்ள பெர்னாண்டோ கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், விவசாய துறையின் தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்யவதற்காக நாங்கள் தமிழகம் வந்துள்ளோம்.

இங்கு காந்திகிராமம், பெரியகுளம் பகுதியில் மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி போன்றவை நல்ல தரத்துடன் இருக்கிறது.

இங்குள்ள சந்தை முறைகள் மற்றும் தொழில்நுட்ப முறைகளை அறிந்து அதைப் பின்பற்றி கிராமங்களை மேம்படுத்துவதே எங்கள் பயணத்தின் முக்கிய நோக்கம். இலங்கையில் பயங்கரவாதம் இருப்பினும் அதிபர் ராஜபக்ஷே அரசு விவசாயத்துறை முன்னேற்றத்திற்காக செயலாற்றுகிறது.

நாட்டை பிரிக்காமல் தமிழர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும். அதை தான் தற்போதைய அரசு செய்துக் கொண்டிருக்கிறது. தனி ஈழம் என்ற பேச்சுக்கு இடமே கிடையாது என்றார் பெர்னாண்டோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+