சென்னை-பெங்களூர் சிறப்பு ரயில் டிசம்பர் வரை நீட்டிப்பு
சென்னைசென்னை-பெங்களூர் இடையிலான வாரந்திர சிறப்பு ரயில் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
சென்னை- பெங்களூர் இடையிலான ரயில்கள், பஸ்களில் எப்போதுமே கூட்டம் அலை மோதி வருகிறது. கோடை காலத்தில் இந்தக் கூட்டம் பல மடங்கானது.
இதையடுத்து சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் (எண்-0687), பெங்களூரில் இருந்து சென்னைக்கு திங்கள்கிழமைகளிலும் சிறப்பு ரயில் (எண்-0688) இயக்கப்பட்டது.
இந் நிலையில் இந்த ரயிலில் இன்னும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் இதை அந்த ஆண்டு இறுதி வரை (டிசம்பர் 31ம் தேதி வரை) நீட்டிக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ரயில்:
இதற்கிடையே சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எஃப்) ஏ.சி. மற்றும் டி.சி. மின்சாரத்தில் ஓடக் கூடிய மின்சார ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலின் உட்புறம் முழுவதும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு நிறுத்தத்தையும் காண வசதியாக அனைத்து பெட்டிகளிலும் டிஜிட்டல் போர்டு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications