சென்னையில் அவசரமாய் தரையிறங்கியபாங்காக்-மும்பை ஏர் இந்தியா விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஏர் இந்தியா விமான ஊழியர்களுடன் மும்பைக்கு பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
14 ஊழியர்கள் மற்றும் சிப்பந்திகளுடன் அந்த ஏர் இந்தியா விமானம் தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து மும்பைக்கு பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அதை அவசரமாக சென்னையில் தரையிறக்கினர் விமானிகள்.
இந்த விமானம் தரையிறங்க அவசர கால நிலைமைக்கு சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. ஆனால், விமானம் பத்திரமாக தரையிறங்கிவிட்டது.












Click it and Unblock the Notifications