தொடர் மழை: காவிரியில் நீரை திறந்துவிட்டது கர்நாடகம்

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

கர்நாடகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பருவ மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு அணையின் நீர் மட்டம் குறைவாக இருந்ததால் குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

இந் நிலையில் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதையடுத்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடடுள்ளது கர்நாடகம். இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதே போல் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்தும் வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூருக்கு நேற்று வந்தடைந்தது. இப்போது வினாடிக்கு 2,800 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டும் இன்று காலை 72.76 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் வினாடிக்கு 1,900 கனஅடி திறந்து விடப்பட்டு வருகிறது.

கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர் நாளை மாலை மேட்டூர் வந்தடையும். இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+