தஞ்சாவூர்: பள்ளி சுவர் இடிந்து 8 மாணவிகள் காயம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் பள்ளியின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 8 மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
தஞ்சாவூர் கீழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இறை வணக்கம் நடந்துக் கொண்டிருந்தது.
அப்போது பள்ளியின் சுற்றுச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 8 மாணவிகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் நாகபட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications