மணப்பாறை டாக்டர் தம்பதியைவிசாரிக்க ஒரு நாள் போலீஸ் காவல்
திருச்சி:சிறுவன் சிசேரியன் செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணப்பாறை டாக்டர் தம்பதியை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மணப்பாறை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மணப்பாறையைச் சேர்ந்த டாக்டர்கள் முருகேசன், காந்திமதி தம்பதியின் மகன் திலீபன் ராஜ். 15 வயதாகும் இவன் 11வது வகுப்பு படித்து வருகிறான். சமீபத்தில் தனது மகன் திலீபன், ஒரு பெண்ணுக்கு சிசேரியன் மூலம் பிரசவம் பார்தத்தாக டாக்டர்களிடையே கூறினார் முருகேசன்.
![]() |
இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்திடம் புகார் கொடுத்தனர். வெளியிலும் இந்தத் தகவலை வெளியிட்டனர்.
இனால் நாடே அதிர்ந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையின் இறுதியில் டாக்டர் தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். திலீபன் ராஜ் தலைமறைவாகி விட்டான்.
![]() |
சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாக்டர் தம்பதியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மணப்பாறை போலீஸார் மணப்பாறை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நேற்று விசாறணைக்கு வந்தது. அப்போது டாக்டர்கள் இருவரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். தங்களை போலீஸ் காவலில் அனுப்பினால், சித்திரவதை செய்யப்படுவோம், எனவே போலீஸ் காவலில் அனுப்பக் கூடாது என்று டாக்டர் முருகேசன், மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை விடுத்தார்.
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் செங்கமலச் செல்வன், இருவரையும் 3ம் தேதி மாலை 4 மணி வரை அதாவது இன்று மாலை வரை மட்டும் ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து டாக்டர் தம்பதியை போலீஸார் அழைத்துச் சென்றனர்.
முருகேசனை, மணப்பாறை சட்டம் ஒழுங்கு பிரிவு அலுவலகத்திற்கும், காந்திமதியை மகளிர் காவல் நிலையத்துக்கும் கொண்டு ெசன்று விசாரணையை தொடங்கினர். இன்று மாலை விசாரணை முடிந்ததும் இருவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார்கள்.














Click it and Unblock the Notifications