ஜனாதிபதி தேர்தல்: பிரதீபா, ஷெகாவத் நேரடி மோதல்
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதீபா பாட்டீலும், பைரான் சிங் ஷெகாவத்தும் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட பிற வேட்பு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
ஜூலை 19ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகள் சார்பில் பிரதீபா பாட்டீல், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பைரான் சிங் ஷெகாவத் உள்பட 84 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் அனைத்தும் நேற்று பரிசீலிக்கப்பட்டன. அப்போது, பாட்டீல் மற்றும் ஷெகாவத் ஆகியோரின் வேட்பு மனுக்கள் மட்டுமே முறையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மற்ற அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஆச்சாரி கூறுகையில், பிரதீபா பாட்டீல் தாக்கல் செய்த நான்கு வேட்பு மனுக்களும், ஷெகாவத் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களும் மட்டுமே முறையாக இருந்தன. மற்றவை அனைத்தும் முறைப்படி தாக்கல் செய்யப்படவில்லை.
இதையடுத்து பிரதீபா பாட்டீல் மற்றும் ஷெகாவத்தின் வேட்பு மனுக்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மற்றவை தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
இத்தனை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை எதிர்காலத்தில் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையான வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள். வெறும் விளம்பரத்திற்காகவே பலரும் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள். இதைத் தடுக்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்றார் ஆச்சாரி.
தேர்தலில் போட்டியிடும் ஷெகாவத் துணை குடியரசுத் தலைவராக இருப்பதால் அவருக்கு ஏற்கனவே போதிய பாதுகாப்பு உள்ளது. பிரதீபா பாட்டீலுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது குறித்து தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லவிருப்பதாகவும் ஆச்சாரி கூறினார்.
தொடர்ந்து ஆச்சாரி கூறுகையில், 7 வேட்பாளர்களுக்கு அவர்கள் செலுத்திய டெபாசிட் தொகை தேர்தல் நடைமுறைகள் முடிந்த பின்னர் திருப்பித் தரப்படும்.
சில வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த மனுவில் 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின் பெயர்களை முன்மொழிபவர்களாகவும், வழிமொழிபவர்களாகவும் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் அந்தப் பெயர்களில் எம்.பிக்களும் இல்லை, எம்.எல்.ஏக்களும் இல்லை.
மத்தியப் பிரதேச மாநிலம் தாதியாவைச் சேர்ந்த மோகன் ராமாயணி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில் ராமர், சீதை முன்மொழிபவர்களாகவும், ராவணனை வழிமொழிபவர்களாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சதீஷ் என்பவரோ, குடியரசுத் தலைவர் மாளிகை உள்ள பகுதி மால்சா பஞ்சாயத்தைச் தேர்ந்தது என்று கூறி அந்தப் பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி இணைத்திருந்தார் என்று கூறினார் ஆச்சாரி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications