கல்யாணத்திற்கு வந்த இடத்தில் காம வெறி:அழகியை அனுபவித்து கொன்ற ஆசிரியர்கள்!!!
செஞ்சி:கல்யாணத்திற்கு வந்த இடத்தில், ஹோட்டலில் வாலிபருடன் தங்கியிருந்த பெண்ணை 4 ஆசிரியர்கள் உள்பட 5 பேர் சேர்ந்து கற்பழித்தனர்.
ஆனால் அதன் பின்னர் அந்தப் பெண் மயங்கி விட்டதால் 6வதாக அனுபவிக்க வந்த நபர், ஆத்திரமடைந்து அப்பெண்ணைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக 4 ஆசிரியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் திண்டிவனம் செல்லும் சாலையில் ஒரு லாட்ஜ் உள்ளது. இந்த லாட்ஜில், கடந்த 28ம் தேதி ஒரு அறையில் பெண் ஒருவர் கத்திக் குத்துக் காயத்துடன் பிணமாகக் கிடந்தார். அவருடன் தங்கியிருந்த நபர் தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த பெண் விபச்சார பெண்ணாக இருக்கக் கூடும் என்று தெரிய வந்தது. போலீஸ் மோப்ப நாய் ஏஞ்சலா விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டது.
கொலையுண்ட பெண் கிடந்த அறையிலிருந்து பக்கத்து அறைக்கு அந்த நாய் சென்றது. இதையடுத்து அந்த அறையில் இருந்தவர்களுக்கும், கொலையில் பங்கு இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகித்தனர்.
அந்த அறையில் தங்கியிருந்தது யார் என்று லாட்ஜ் ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
![]() |
அப்போது 6 பேர் சேர்ந்து அந்தப் பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்துக் கொன்றதாக போலீஸாரிடம் லாட்ஜ் ஊழியர்கள் உண்மையை போட்டு உடைத்தனர்.
கடந்த 27ம் தேதி கொலையுண்ட விபச்சாரப் பெண்ணை ஒரு வாலிபர் அழைத்துக் கொண்டு லாட்ஜுக்கு வந்து அறை எடுத்துத் தங்கியுள்ளார். கல்யாணத்திற்கு வந்ததாக கூறி இருவரும் அறை எடுத்துள்ளனர்.
அவர்களின் பக்கத்து அறையில் கல்யாணத்திற்காக வந்த சிலர் தங்கியிருந்தனர். அனைவரும் ஆண்கள். இரவில் அவர்கள் மது அருந்தியுள்ளனர்.
அப்போது பக்கத்து அறையில் ஆணும் பெண்ணும் இருப்பதை அறிந்து போதையில் உள்ளே நுழைந்துள்ளனர்.
வாலிபருடன் பெண் இருப்பதைப் பார்த்த அவர்களுக்கு அந்தப் பெண் மீது மோகம் ஏறியது. நாங்கள் உற்சாகமாக இருக்க வேண்டும் என்று அந்த வாலிபரிடம் கேட்டுள்ளனர்.
அவர் தடுத்துள்ளார். இதையடுத்து அவரைத் அடித்து துரத்தி விட்டுள்ளனர்.
இதையடுத்து காமவெறி பிடித்த ஆண் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட அந்தப் பெண் தப்பிக்க முடியாமல் தவித்துள்ளார். வரிசையாக ஐந்து பேர் அந்தப் பெண்ணை பலவந்தப்படுத்தி அனுபவித்துள்ளனர். 6வது நபர் உல்லாசமாக இருக்க வந்தபோது அந்தப் பெண் மயக்கமடைந்துவிட்டார்.
அதைப் பார்த்தது அந்த நபருக்கு கடும் வெறி ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அவர் கத்தியால் அந்தப் பெண்ணை சரமாரியாக குத்திக் கொன்றார்.
இதையடுத்து அத்தனை பேரும் சேர்ந்து குளியல் அறைக்குள் பிணத்தைப் போட்டு விட்டுச் சென்று விட்டனர். தகவல் அறிந்த லாட்ஜ் ஊழியர்கள் ஜெயக்குமார், ஏழுமலை ஆகியோர் அறையில் சிந்திக் கிடந்த ரத்தத்தைத் துடைத்து தடயங்களை அழித்துள்ளனர்.
இந்தக் கொலையை செய்த கும்பல் செஞ்சியைச் சேர்ந்த ஆசிரியர் சிவக்குமார் என்பவரின் திருமணத்திற்காக வந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆசிரியர் சிவக்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது மாப்பிள்ளை வீட்டார் சார்பில் அந்த லாட்ஜில் 10 அறைகள் புக் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அதில் கொலையுண்ட பெண்ணின் பக்கத்து அறையில், ஆசிரியர்கள் சீனுவாச பெருமாள், தணிகை அரசு, ஜனார்த்தனன், வாசுதேவன் மற்றும் ஆனந்தன், பஸ் டிரைவர் தர்மன் ஆகியோர் தங்கியிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டது. போலீஸாரின் தீவிர விசாரணையில், ஆறு பேரும் மேல்மலையனூர் பகுதியில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற போலீலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். 6 பேரையும் கைது செய்த போலீஸார் கொலையை மறைக்க முயன்ற குற்றத்திற்காக லாட்ஜ் ஊழியர்கள் இருவரையும் கைது செய்தனர்.
கொல்லப்பட்ட பெண் யார், அவருடன் வந்த நபர் என்ன ஆனார் என்பது குறித்து தற்போது விசாரித்து வருகின்றனர். பெண்ணை லாட்ஜுக்கு அழைத்து வந்த அந்த நபர் தலைமறைவாகிவிட்டதாகத் தெரிகிறது. அழகியுடன் உல்லாசமாக இருக்க முயன்றதாக தனது பெயர் கெட்டுவிடும் என்பதால் அவர் ஓடியிருக்கிறார்
நல்லொழுக்கத்தைப் போதிக்க வேண்டிய ஆசிரியர்கள், கீழ்த்தரமாக நடந்து கொண்டு மது போதையில் பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்து கொலை செய்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications