ஜனாதிபதி தேர்தலில் மம்தா ஆதரவு யாருக்கு?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
டெல்லியிலிருந்து கேரளா செல்லும் வழியில் மம்தா பானர்ஜி இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து எங்களது கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை.
இதுகுறித்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் ஆலோசித்த பின்னர்தான் முடிவை அறிவிப்போம். 3-வது அணி பற்றி நான் எதுவும் சொல்லத் தேவையில்லை. நமது நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், எந்த கட்சியுடனும் கூட்டு சேரலாம். இதற்கு மேல் எதுவும் கூற முடியாது என்றார் மம்தா.












Click it and Unblock the Notifications