ஜீப்புடன் மோதியது எங்கள் மகன்தான்- கபீல் பெற்றோர் ஒப்புதல்
பெங்களூர்:கிளாஸ்கோ விமான நிலையம் ஜீப்பை ஓட்டிச் சென்று மோதி வெடிக்கச் செய்தது தங்களது மகன் கபீல் அகமதுதான் என்று அவரது பெற்றோர் உறுதிப்படுத்தியுள்ளதாக பெங்களூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ விமான நிலையம் மீது ஜீப்புடன் வந்து மோதி விமான நிலையத்தைத் தகர்க்க முயற்சி நடந்தது. இந்த முயற்சியை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தங்களது முயற்சி தோல்வி அடைந்ததால் ஜீப்புக்கு தீவைத்தனர் அதில் வந்த இருவரும். இதில் ஒருவர் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டார். மற்றொருவரான டாக்டர் பிலால் அப்துல்லா லேசான காயத்துடன் மீட்கப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டவர்தான் ஜீப்பை ஓட்டி வந்தவர். அவரது பெயர் கபீல் அகமது, இவர் பெங்களூரைச் சேர்ந்தவர் என்பதும், இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் சபீல் அகமதுவின் அண்ணன் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து கபீல் அகமதுவின் பெங்களூர் வீட்டுக்கு பெங்களூர் போலீஸார் சென்று விசாரணை மேற்கொண்டு தகவல்கள் சேகரித்தனர்.
விசாரணையின்போது ஜீப்புடன் சென்று மோதியது தங்களது மகன் கபீல் அகமதுதான் என்று அவரது பெற்றோர் டாக்டர் மக்பூல் அகமது, தாயார் ஜாக்கியா அகமது ஆகியோர் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணைக் குழுவில் இடம் பெற்றிருந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி கூறுகையில், அது எங்களது மகன் கபீல்தான் என்று கூறியதாக தெரிவித்தார்.
ஆனால் இதை மாநகர காவல்துறை ஆணையர் அச்சுதராவ் மறுத்துள்ளார். விசாரணையின்போது கபீல் அகமதுவின் பெற்றோர் இதுபோன்று எதுவும் தெரிவிக்கவில்லை என்றார் ராவ்.
பெங்களூர் டாக்டர்களுக்கும், இங்கிலாந்து தீவிரவாத தாக்குதல்களுக்கும் உள்ளதாக கூறப்படும் தொடர்புகள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். இப்போதைக்கு உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார் ராவ்.
இதற்கிடையே கபீல் மற்றும் சபீல் அகமதுவின் வீட்டிலிருந்து ஒரு கம்ப்யூட்டர், சில ஹார்ட் டிஸ்குகள் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். பெங்களூர் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் அவற்றை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அதில் உள்ள தகவல்கள் குறித்து தீவிரமாக பகுக்கப்பட்டு வருகிறது.
இரு சகோதரர்களுக்கும் வந்த இ மெயில்கள், இன்டர்நெட் சாட்டிங் விவரங்கள் உள்ளிட்டவை குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications