ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை திறப்பு?
சென்னை:மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருப்பதால் ஓரிரு நாட்களில் பாசனத்திற்காக அணை திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் தென் மேற்கு பருவ மழை தொடர்ந்து வலுத்து வருகிறது. இதனால் அங்கு காவிரியின் குறுக்கே உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கர்நாடக விவசாயிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து அணை மூடப்பட்டது.
இருப்பினும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கபிணி அணையிலிருந்து நீர் திறந்து விடுவது குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் 3 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்தது.
நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 83 அடியாக இருந்தது. தொடர்ந்து நீர்மட்டம் அதிகரித்தவண்ணம் இருப்பதால் ஓரிரு நாட்களில் நீர்மட்டம் 90 அடியைத் தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் காவிரிப் பாசனத்திற்காக அணை திறக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications